தனுசு - வார பலன்கள்
சிரித்த முகத்துடன் நண்பர்களுக்கு உதவும் தனுசு ராசி அன்பர்களே!
வியாழக்கிழமை மாலை 6.19 மணி முதல் சந்திராஷ்டமம் உள்ளதால், வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் உண்டாகும். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நஷ்டம் எதுவும் ஏற்படாது. அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
பலரும் பாராட்டும் அளவில் மாணவர்கள் படிப்பில் சிறப்பான நிலையைப் பெற்றிருப்பார்கள். சில விஷயங்களில் சிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் நீங்கள் நிதானப்போக்கைக் கடைப்பிடிப்பதும், சிக்கனத்தை மேற்கொள்வதும், பெரும்பாலான சங்கடங்களைத் தவிர்த்து விடும். தொழில் செய்பவர்கள், உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவர். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்க பெரும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் சுமுகமாக நடப்பதன் மூலம் சில பிரச்சினை தீரும்.
பரிகாரம்:- இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.