விருச்சகம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லும் விருச்சிக ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். குருவின் பார்வை தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வி.ஐ.பிக்கள் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றக் காத்திருப்பர். வியாபாரம், தொழில் வெற்றிநடைபோடும். அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கலாம். எனவே சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.
மிதுன - புதன்
ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். அஷ்டமத்திற்கு புதன் வரும்போது மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். லாபாதிபதியாகவும் புதன் விளங்குவதால் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி மாதம் 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவர் மீது குருவின் பார்வை பதிவதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். முக்கியப் பிரமுகர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். அரசாங்க ஆதரவும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாக அமையும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் 6-க்கு அதிபதி செவ்வாய், 10-க்கு அதிபதி சுக்ரனோடு இணைவதால் 'விபரீத ராஜ யோக'மும் செயல்படும். குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுகிறது. எனவே ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கமும் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். வராத பாக்கிகள் வசூலாகும். வந்த தொகை சேமிப்பாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு திருப்தி தரும். கூடுதல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்தாலும் அதற்கேற்ப சம்பள உயர்வும் கூடும். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியாளர்கள் கடமை உணர்வுடன் செயல்படுவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு வெளிநாட்டு அழைப்பு வரலாம். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் திருப்தி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவர்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 21, 22, 27, 28, ஜூலை: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.