விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்


விருச்சகம் - தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 10 May 2022 8:33 PM IST (Updated: 10 May 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் போது, புதிய பொறுப்புகள் கிடைக்கும். அங்குள்ள குருவோடு செவ்வாய் சேர்ந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குவதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஆகாரத்தில் அக்கறை செலுத்துங்கள்.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். அதாவது உங்கள் ராசிநாதன் செவ்வாயை சகாய ஸ்தானாதிபதி சனி பார்ப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறும் நேரம் இது.

புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். சேமிப்பு உயரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலம் இனிய காலமாக அமையப் போகிறது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ல் வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றியாகும் நேரம் இது.

மகரச் சனியின் வக்ர காலம்

வைகாசி 11-ந் தேதி மகரத்தில் இருக்கும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறும்போது, ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு அகலும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வீடு மாற்றம், இடமாற்றம் அமையலாம். உயர்பதவியில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இதுபோன்ற காலங்களில் குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

இம்மாதம் ராஜ அலங்கார முருகனை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 19, 20, 23, 24, ஜூன்: 3, 4, 5, 8, 9, 10, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாகப்பிரிவினை சுமுகமாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குரு பார்வை இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். அசையாச் சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமை வந்துசேரும். பணி யில் கேட்ட சலுகை கிடைக் கும். ஊதிய உயர்வால் மகிழ்ச்சியடைவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


Next Story