விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 July 2023 7:39 PM GMT (Updated: 27 July 2023 7:40 PM GMT)

காரியங்களில் உற்சாகமாக ஈடுபடும் விருச்சிக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் தீவிரமாக செயல்புரிந்து வெற்றி அடைவீர்கள். காரியங்களில் சிறு சிறு தடைகள் இருந்தாலும், அவற்றை உடைத்து முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த காரியங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றியை சந்திப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்துகொள்வது நல்லது. சொந்தத் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், வழக்கமான லாபம் குறையாது. பொருட்களை அதிகம் வாங்கி குவித்துவைக்க வேண்டாம். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவார்கள். பழைய கடன் தொல்லை தலைதூக்கும். கலைஞர்கள், உற்சாகமாகத் தங்கள் பணிகளில் ஈடுபடுவர். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு நிற மலர் மாலை சூட்டுங்கள்.


Next Story