விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
தினத்தந்தி 10 Feb 2023 12:53 AM IST (Updated: 10 Feb 2023 12:55 AM IST)
t-max-icont-min-icon

கட்டளையிடும் குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் கவனமும், நிதானமும் அவசியம். சில பிரச்சினைகளை நிதானமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். நிறுத்தி வைத்திருந்த வேலையைச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபர் ஒருவர் அறிமுகத்தால் தொழில் ரீதியான முன்னேற்றத்தை அடைவார்கள். ஓய்வில்லாமல் பணிகளில் செயலாற்றுவீர்கள். கூட்டு முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள் தீவிர முயற்சியினால் புதிய ஒப்பந்தம் பெற்று பணிகளில் ஈடுபடுவார்கள். சகக்கலைஞர்கள், உங்கள் பணிகளில் அதிக ஒத்துழைப்புத் தருவார்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள்.

பரிகாரம்:- அங்காரக பகவானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சிறப்பும், செல்வமும் அளிக்கும்.


Next Story