விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
தினத்தந்தி 3 March 2023 1:38 AM IST (Updated: 3 March 2023 1:40 AM IST)
t-max-icont-min-icon

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

எதிர்ப்புகளை முறியடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை 11.13 வரை சந்திராஷ்டமம் உள்ளதால், வரவு இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலர், அறியாமல் செய்த தவறினால், அலுவலகத்தில் சலசலப்பு உருவாகக்கூடும். உயரதிகாரிகளின் ஆதரவால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவு சுமாராக இருக்கலாம். கூட்டுத்தொழில் நன்றாக இருந்தாலும், எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். பங்குச்சந்தை வழக்கம் போல் இருக்கும்.

கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற சிறிதுகாலம் பொறுமையாக இருப்பது அவசியம். வெளியூர் பயணங்களில் கொண்டு செல்லும் பொருட்கள் மீது கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பெண்களுக்கு சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அம்பாள் சன்னிதியில் நெய் தீபமேற்றி, வழிபடுவது நற்பலன்களைத் தரும்.


Next Story