ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் உன்னத குணம் பெற்ற ரிஷப ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதனோடு இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 'புத சுக்ர யோகம்' ஏற்படுகிறது. எனவே பொருளாதார விருத்தி அதிகரிக்கும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதனும், 6-க்கு அதிபதியுமான சுக்ரன் நீச்சம் பெறுவதால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தொழிலில் மந்த நிலை ஏற்படும். பங்குதாரர்கள் விலக நேரிடலாம். இல்லத்தில் இதுவரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி மாதம் 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் உச்சம் பெறுவது நன்மைதான். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப பிரச்சினை படிப்படியாகத் தீரும். கொடுக்கல் - வாங்கலில் நிறைவு ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 2-ல் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் என்பதால், அதனை சுபவிரயங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். துணிவும், தன்னம்பிக்கையும் தேவைப்படும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடுகள் அவசியம். மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். இதனால் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படலாம். பூர்வீக சொத்து பிரச்சினைஅதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. கொடுக்கல் -வாங்கல்களில் கவனம் தேவை.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு அகலும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அண்ணன் - தம்பிக்குள் இருந்த உரசல்கள் மாறும். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். தொழிலுக்கான புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்து மற்றும் வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 23, 24, அக்டோபர்: 5, 6, 9, 10, 16, 17.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவு திருப்தி தரும். சுப விரயங்களும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவு பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.