ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை

சமூக சேவையில் ஈடுபட்டு பிறருக்கு உதவ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்திலேயே சொந்த வீட்டிற்குச் சென்று பலம் பெறப் போகிறார். எனவே ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும்.

துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி தன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். 6-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், ஜீவன ஸ்தானம் வலுவடைகிறது. எனவே தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து, பொருளாதாரம் உயர வழி வகுத்துக் கொடுப்பர். உறவினர் பகை அகலும். நீண்ட நாளாக நடைபெற்று வந்த வழக்குகள், உங்களுக்கு சாதகமாக முடியலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது.

துலாம் - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ஐப்பசி 6-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும்.

மிதுன - செவ்வாய் வக்ரம்

ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், சப்தமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் வக்ரம் பெறுவதால், விரயங்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். அதே நேரத்தில் வீட்டில் குழப்பங்கள் அதிகரிக்கும். இல்லத்தில்உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வது அரிது. பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். மேலதிகாரிகள் உங்களிடம் அதிக பணிச் சுமையை திணிக்கலாம். வீடு தேடி வந்த வரன்கள் முடிவடையாமல் போகலாம். வெளிநாட்டு உத்தியோகம் சம்பந்தமாக ஏற்பாடு செய்தவர்களுக்கு அது கைகூடுவது தாமதமாகும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிக - புதன் சஞ்சாரம்

ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதி யான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வரும் போது பணப் புழக்கம் சரளமாக இருக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக் கசப்புகள் மாறும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி வந்துசேரும். உத்தி யோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் சப்தம ஸ்தானத்திற்கு வருகையில், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் தனவரவும் உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். வாசல் வரை வந்து கை நழுவிப் போன வரன்கள், மீண்டும் வந்து சேரும். சுப விரயங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

குரு வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு வழிக்கு நன்மைதான். பொருளாதார பற்றாக்குறை அகலும். அதே நேரம் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகம் என்பதால், சில நேரங்களில் மனஅமைதி குறைவு உண்டாகலாம். வருமானம் வந்தவுடனேயே செலவாகிவிடும். பயணங்கள் அதிகரிக்கும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் சிவன், அம்பாளை வழிபாடு செய்து வந்தால் செல்வநிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 21, 22, நவம்பர்: 1, 2, 5, 6, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் செலவிற்கேற்ப பண வரவு இருக்கும். திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களால் பெருமை உண்டு. உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். குரு வக்ர நிவர்த்தியாகும் மாதம் என்பதால் உறவினர்களால் திடீர் விரயங்களும் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு வரும் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலதிகாரிகள், நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.


Next Story