ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 10 May 2022 8:17 PM IST (Updated: 10 May 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை


விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அங்குள்ள லாபாதிபதி குருவோடு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, விரயத்திற்கேற்ற பணம் வந்துசேரும். காரியங்கள் கடைசி நேரத்தில் எப்படியாவது கை கூடிவிடும். நண்பர்கள் உதவுவார்கள். ஊர் மாற்றம், வீடு மாற்றத்துக்கான முயற்சி கைகூடும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி யோகம் செய்யும் கிரகமாகும். அவர் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். கடன்சுமை குறையும்.

புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே அவர் வக்ர நிவர்த்தியாவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிதென்படும். வைகாசி 23-ந் தேதி அன்று ரிஷப ராசியான உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மருத்துவச் செலவு கூடும். எதையும் துணிந்து செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

மகரச் சனியின் வக்ர காலம்

உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் வழி பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை முடிவுக்கு வராது. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.

இம்மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 21, 22, 25, 26, ஜூன்: 1, 2, 6, 7மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரய ஸ்தானம் வலுப்பெறுவதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். கணவன் - மனைவி உறவு திருப்திகரமாக இருந்தாலும், உறவினர்கள் வாயிலாக சில பிரச்சினைகள் உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நினைத்தது நிறைவேறும்.


Next Story