ரிஷபம் - வார பலன்கள்
அறிவுக்கூர்மையும், கற்பனையும் மிகுந்த ரிஷப ராசி அன்பர்களே!
எந்த காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டிய வாரம் இது. மிகுந்த பொறுமையை கடைப்பிடித்தாலும் இடையில் சிறுசிறு தொல்லைகள் ஏற்படும். தேவையற்ற பயணத்தை தள்ளிவைப்பது நல்லது. தீவிர முயற்சியே முன்னேற்றத்தை தரும். எதிர்பார்க்கும் பண வரவு, சிறிது தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணி மாற்றமோ அல்லது பதவி மாற்றமோ உண்டாகும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்தத்தொழிலில் புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டு. கூட்டுத்தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பயன் தரும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் மனசஞ்சலம் அளித்தாலும், அதிக பாதிப்பு இருக்காது. கலைத் துறையினர் ஏற்றம் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபமிட்டு அர்ச்சனை செய்யுங்கள்.