ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:22 AM IST (Updated: 21 July 2023 1:23 AM IST)
t-max-icont-min-icon

எதிலும் உறுதியுடன் போராடும் ரிஷப ராசி அன்பர்களே!

செயல்கள் அனைத்தும் சீர்மிகு பயன் தரும் சிறந்த வாரம் இது. வழக்கமான விஷயங்கள் சிறப்பாக நடைபெறும். சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து, வேறு இடங்களுக்கு செல்வார்கள்.

சொந்தத் தொழிலில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வைப்பதால், பொருளாதாரம் மேம்படுவதோடு வாடிக்கையாளர்களின் நட்பும் பலப்படும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்களில் ஒருவர் பிரிந்து சென்று தனியே தொழில் தொடங்க முயற்சிப்பார். கணக்குகளை கவனமாகக் கையாளுவது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடைபெற சந்தர்ப்பம் உருவாகும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் முன்னர் படித்துப் பார்ப்பது பிரச்சினைகளைக் குறைக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கு வில்வ மாலை சூட்டுங்கள்.

1 More update

Next Story