ரிஷபம் - வார பலன்கள்
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் ரிஷப ராசி அன்பர்களே!
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய பொருள் வாங்குவதையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கடமையில் சுறுசுறுப்பாக இருந்து உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத்தொழில் லாபகரமாக இயங்கும். பணப் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கடன் தொல்லை அகலும். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான வழிபிறக்கும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாட்டுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து கையொப்பமிடுங்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் நிற மாலை சூட்டி வணங்குங்கள்.