ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:32 AM IST (Updated: 4 Aug 2023 12:47 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

கலைத்துறையில்அதிக ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

முக்கியமான நபர்களைச் சந்திக்க இயலாமல் போகக்கூடும். சில காரியங்களில் தளர்வுகளைச் சந்திக்க நேரிடும். வரவேண்டிய தனவரவுகள் சரியான நேரத்துக்கு கிடைத்தாலும், செலவுகளால் பற்றாக்குறை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளிடம் சுமுகமாக நடந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகள் உருவாகும்.

சொந்தத் தொழிலில் புதிய நபர்களின் வருகையும், அவர்களால் பண வரவுகளும் வந்துசேரும். கொடுத்த வாக்கைக் காப்பற்ற முடியாமல் திணறுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறாவிட்டாலும் வழக்கமான லாபம் குறையாது. சிறுசிறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் குடும்பம் நடைபெறும். ஆனாலும் அந்த பிரச்சினைகளை சமாளித்துவிடுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சிப்பீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.


Next Story