ரிஷபம் - வார பலன்கள்

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை
தன்னம்பிக்கையோடு செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
நெருங்கிய நண்பர்கள் உதவியுடன், முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சில சலுகைகளை, உயர் அதிகாரிகளின் மூலம் பெறுவீர்கள். புதியவரிடம் ரகசியங்களைப் பரிமாற வேண்டாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் கவனமாக செயல்பட வேண்டியதிருக்கும். முடிவு எடுப்பதில் நிதானம் தேவை. பங்குச்சந்தையில் முக்கியத் திருப்பங்களைச் சந்திக்க நேரும்.
கலைத்துறையினர் நல்ல திருப்பத்தைக் கண்டு மகிழ்வீர்கள்.வாய்ப்புகளும், தேடி வரக்கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் மகிழ்ச் சிக்குக் குறையிருக்காது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது. மங்கள நிகழ்ச்சிகள் மனதை நிறைவடையச் செய்யும்.
பரிகாரம்:- சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.