ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 1:20 AM IST (Updated: 17 March 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்துடன் பணியாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை காலை 7.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருங்கள். நெருப்புத் தொழில் செய்பவர்களுக்கும், சுங்கத் துறையில் உள்ளவர்களுக்கும் அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.

உஷ்ணம் சம்பந்தமான நோய்களால் அவதிப்பட்டவர்கள், அதில் இருந்து விடுபடுவர். கடன் பிரச்சினைகள் விரைவில் தீர்வதற்கான வழிபிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலையே காணப்படும். மனைவி வழி உறவினர்கள் ஒத்துழைப்பு தருவர்.

தொழில் செய்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றிபெற தொழிலாளர்கள் உறுதுணையாக இருப்பர். தந்தை வழி உறவினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சளி, இருமல் போன்ற சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வதில் ஈடுபாடு கூடும்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


Next Story