ரிஷபம் - வார பலன்கள்
நண்பர்களை ஆதரித்துச் செல்லும் ரிஷப ராசி அன்பர்களே!
உத்தியோகஸ்தர்கள், அலுவலக விஷயங்களில் திருப்திகரமான போக்கை காண்பது கடினம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். ஆனால் அதற்கேற்ற வருமானம் வருமா என்பது சந்தேகம்தான். கூட்டுத் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து வரும்.
கலைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களில் இருந்து புதியதாக சில வாய்ப்புகள் வந்து சேரும். ஆனால் அதன் மூலம் பொருளாதார உயர்வுக்கு வழி ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றினாலும், அதனை வீட்டில் உள்ள பெண்களே, தங்களின் புத்திசாலித்தனத்தால் சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். இல்லத்தில் சில நேரங்களில் அமைதி நிலவும். வாகனம் ஓட்டும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் சிலருக்கு, சேமிப்பு சரியான நேரத்தில் கைகொடுக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் முழுவதும் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.