ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 13 April 2023 8:18 PM GMT (Updated: 13 April 2023 8:18 PM GMT)

புதிய உத்திகள் மூலம் வெற்றி பெறும் ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களும், உறவினர்களும், தகுந்த சமயங்களில் உதவி செய்வார்கள். திட்டமிட்ட பணவரவுகள் கைகளுக்கு வந்துசேரும். மாமன் மைத்துனர்களால் அன்புத் தொல்லை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி தள்ளிவைத்த வேலையை அவசரமாகச் செய்து முடிப்பீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெற முன்னேற்பாடுகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள், சகோதர வழி உறவுகளில் நடைபெறும் மங்கல நிகழ்வுகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். கலைஞர்கள், சகக் கலைஞர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்குப் பண உதவி செய்வீர்கள். வருமானம் தேவையான அளவு கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கும் அளவு இருக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை லட்சுமி ஹயக்ரீவருக்கு, துளசி மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story