ரிஷபம் - வார பலன்கள்
ஆன்மிகத்தில் அதிக பற்று கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
தீவிர முயற்சிகளோடு பணவரவுகளைப் பெற அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். புதியவர்களின் நட்பால் வெளியுலக தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் அதிக கவனம் இருப்பது அவசியம். உயரதிகாரிகளுக்கு, உங்கள் சிறிய தவறும் பெரிதாகத் தோற்றமளிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகம் பெறக்கூடும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க முயற்சிப்பார்கள். போட்டிகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில், குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். பெண்கள் தங்கள் சிறு சேமிப்பால் அதனை சமாளிப்பார்கள். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் வழியாக வாய்ப்புகளைப் பெற முயற்சி செய்வார்கள். பயணங்களில் பாதுகாப்பு தேவை. பங்குச்சந்தையில் கவனம் தேவை.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு, துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.