ரிஷபம் - வார பலன்கள்
முன் எச்சரிக்கையோடு நடக்கும் ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் செயல்கள் பலவற்றில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். காரியங்களின் வெற்றிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும். சக நண்பர்களின் பாராட்டும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சொந்தத்தொழில் லாபகரமாக இருக்கும். புதிய நபர்களின் வருகையும், அவர்களால் பொருளாதார முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். கூட்டுத்தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்பம் சீராக நடைபெறும். பழைய கடன் தொல்லைகள் தீரும். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும். கலைஞர்களுக்கு அதிக வருமானம் தரும் ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலர் பணிகளில் பங்கு பெற வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். முதலீடு பெருகும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.