ரிஷபம் - வார பலன்கள்


ரிஷபம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 1:15 AM IST (Updated: 16 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த எழுத்தாற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

தளர்ச்சியைக் கண்டு தயங்காமல், முயற்சியை அதிகப்படுத்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். பணவரவு இருந்தாலும், செலவுகள் நினைத்ததை விட அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகலாம். சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வேலைகளில் கவனம் செலுத்துவர். கூட்டுத் தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் போட்டிகளை முறியடிக்க, பங்குதாரர்களோடு ஆலோசிப்பீர்கள். குடும்பம் சீராக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகள் தோன்றவே செய்யும். அவற்றை பெண்களே சமாளித்து விடுவர். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகள் பெற்றாலும் எதிர்பார்க்கும் வருமானம் இல்லாமல் போகலாம். பங்குச்சந்தையில் கவனம் தேவை.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story