இன்றைய ராசிபலன் - 10.09.2025


Today Rasi Palan- 10.09.2025
x
தினத்தந்தி 10 Sept 2025 5:45 AM IST (Updated: 10 Sept 2025 5:45 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

செப்டம்பர் 10

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஆவணி

நாள்: 25

ஆங்கில தேதி: 10

ஆங்கில மாதம்: செப்டம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று மாலை 07.42 வரை ரேவதி பின்பு அஸ்வினி

திதி: இன்று மாலை 06.44 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம் காலை: 9.00 -10.00

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டாமம்: பூரம், உத்திரம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். ஆரோக்கிய நிலை மேம்படும். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம் குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். நண்பர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்கள் தாமதமாகும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கடன் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

ஆன்மிகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்த பழைய சிக்கல்கள் தீரும். உறவினர்களின் உதவிகள் உண்டு. குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். சுற்றுலாவை தள்ளி போடுவீர்கள். மருத்துவர்கள் செழிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

இன்று உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலம் தேறும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

சிம்மம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

உழைப்பால் முன்னேற்றம் பெறுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

காய்கறி வியாபாரிகள் பயனடைவர். பயணத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

இன்று நண்பர்கள் கைக் கொடுப்பர். இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். உறவினர்களால் நன்மை உண்டு. முகம் புதுப்பொலிவு கூடும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

வேலைப்பளு குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் வரவு அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கும்பம்

எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

மீனம்

நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். நண்பர்கள் தங்களுக்கு மீண்டும் கைக் கொடுப்பர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story