இன்றைய ராசிபலன் (04.01.2026): நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: ஞாயிறு கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: மார்கழி
நாள்: 13
ஆங்கில தேதி: 4
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று காலை 05-49 வரை புனர்பூசம் பின்பு பூசம்
திதி: இன்று பிற்பகல் 2-53 வரை பிரதமை பின்பு துவிதியை
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 06-00 to 07-00
நல்ல நேரம்: மாலை 03-30 to 4-30
ராகு காலம்: மாலை 04-30 to 6-00
எமகண்டம்: மாலை 12-00 to 1-30
குளிகை: மாலை 03-00 to 4-30
கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30
கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
இன்றைய ராசிபலன்
மேஷம்
இறைச்சி மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். உணவு விசயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் அமைதியை காத்தால் நன்கு படிக்க முடியும். பிள்ளை நன்கு படிப்பர். பண விசயத்தில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
மொபைல் மூலம் வேலையை முடிப்பீர்கள். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். சுப காரியங்கள் தாமதமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கசக்கும். உறவினர்கள் வருகை உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும. நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
சிம்மம்
இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
புதிய நண்பர்கள் கிடைப்பர். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சில்லரை வியாபாரிகளுக்கு பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளால் பெருமை கொள்வர். ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். ஆரோக்கிய நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கும்பம்
குலதெய்வ பிரார்த்தனையை தள்ளி போடுவீர்கள். கலைகளில் நாட்டம் கொள்வர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரிகள் செழிப்பர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மீனம்
உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை






