தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும் நாள்.... இன்றைய ராசிபலன் - 24.11.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும் நாள்.... இன்றைய ராசிபலன் - 24.11.2025
Published on

விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 8.40 வரை பூராடம் பின்பு உத்திராடம்

திதி: இன்று மாலை 07.23 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 7.30 - 9.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை காலை: 1.30 - 03.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ரோகினி, மிருகசீரிஷம்

மேஷம்

உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மிதுனம்

பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுப்பர். ஆசிரியரிடம் பாராட்டை பெறுவர். புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கடகம்

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

துலாம்

உங்கள் பிள்ளைக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். தம்பதிகள் ஒன்றினைவர். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் வேண்டிய இலக்கினை எட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் நன்கு படிப்பர். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். பல்வலி வந்து போகும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

வியாபாரிகளுக்கு பயணங்களால் லாபம் தரும் நாளாகும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மீனம்

சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com