ராசிபலன் (11.11.2025): பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் முடிவாகும்..!


ராசிபலன் (11.11.2025): பெற்றோரின் சம்மதத்துடன் காதல் திருமணம் முடிவாகும்..!
x
தினத்தந்தி 11 Nov 2025 6:16 AM IST (Updated: 12 Nov 2025 6:09 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: செவ்வாய் கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஐப்பசி

நாள்: 25

ஆங்கில தேதி: 11

மாதம்: நவம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று அதிகாலை 01-40 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று காலை 07-06 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-45 to 8-45

நல்ல நேரம்: மாலை 4-45 to 3-00

ராகு காலம்: பிற்பகல் 3-00 to 4-30

எமகண்டம்: காலை 9-00 to 10-30

குளிகை: காலை 12-00 to 1-30

கௌரி நல்ல நேரம்: காலை 01-45 to 2-45

கௌரி நல்ல நேரம்: மாலை 7-30 to 8-30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கல்வியில் வெற்றி உண்டு. உடல் நலம் சிறப்படையும். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும்.

அதிர்ஷட நிறம்: சிவப்பு

மிதுனம்

விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தேகம் மின்னும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் மகிழ்ச்சியும் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும்.மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

புதிய தொழில் துவங்குவர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர். உடல் நலம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பாக கவலை உண்டு. வெளிநாடு தொடர்பான விஷயங்கள் தள்ளிப் போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் வருகை உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தாய் மகன் அன்பு பலப்படும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். பணப் புழக்கம் மிகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

அதிர்ஷட நிறம்: நீலம்

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். காதல் கண் சிமிட்டும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பல் வலி, மூட்டு வலி வந்துபோகும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மீனம்

எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பணவரவு சற்று தாமதப்பட்டாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பு லாபத்தை அள்ளும். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர். தேகம் பலம்பெறும். வியாபாரம் செழிப்புறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

1 More update

Next Story