இன்றைய ராசிபலன் - 18.07.2025


இன்றைய ராசிபலன் - 18.07.2025
x
தினத்தந்தி 18 July 2025 6:38 AM IST (Updated: 18 July 2025 6:41 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் ஆடி மாதம் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 3.29 வரை ரேவதி பின்பு அஸ்வினி

திதி: இன்று மாலை 4.11 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 9.15 - 10.15, மாலை 4.45 - 5.45

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

கௌரி நல்ல நேரம்: காலை 12.15 - 1.15, மாலை 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பேசும்போது யோசித்து பேசவும். வியாபாரம் செழிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

காதல் கண்சிமிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மிதுனம்

நல்ல வரண் கிடைக்கும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். வெளியே செல்லும்போது தலைக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

பெண்களின் திருமண கனவு நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியே செல்லும்முன் வாகனத்தை இயக்கும்முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கவலை வேண்டாம். விரும்பிய துறைகள் கிடைத்துவிடும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரிய தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

விருச்சிகம்

உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புது பதவிகள் தேடி வரும். சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். கவனம் தேவை. வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

ஆலயம் சென்று வருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு நல்ல விசயம் குடும்பத்தில் நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

இன்று தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். வெளியே செல்லும்போது முதியவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. நோயிலிருந்து தப்பிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story