இன்றைய ராசிபலன் - 21.06.2025


Todays Horoscope - 21.06.2025
x
தினத்தந்தி 21 Jun 2025 6:22 AM IST (Updated: 21 Jun 2025 6:30 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

ஜுன் 21

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: ஆனி

நாள்: 7

ஆங்கில தேதி: 21

ஆங்கில மாதம்: ஜுன்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று மாலை 5.30 வரை அஸ்வினி பின்பு பரணி

திதி: இன்று அதிகாலை 3.33 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.30 - 08.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் காலை: 9.00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 3.00

குளிகை காலை: 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

வழக்கு சாதகமாக முடியும். அரசு டென்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

ரிசபம்

நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

இன்று குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். பண வரவு தாமதப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பிய நபரை கைபிடிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

கடகம்

அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். வழக்கு சாதகமாக முடியும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

சிம்மம்

கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளை தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம்

பணம் பலவழிகளில் கிட்டும். காதலர்கள் பொறுப்புணர்வர். பிள்ளைகளைப் பற்றிய மனவருத்தம் நீங்கும்.ஆடம்பர செலவினை குறைப்பது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியர்களின் ஆசி கிட்டும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும். வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்கள் மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

கடன் தொல்லை நீங்கி தங்கள் வட்டாரத்தில் தங்களுக்கு மதிப்பு உயரும். தம்பதிகளிடையே மனக்கசப்பு தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலையையும் துவங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

வியாபாரம் செழிப்பாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் மினுமினுக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

1 More update

Next Story