எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடந்தேறும்... இன்றைய ராசிபலன் - 25.10.2025


எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடந்தேறும்... இன்றைய ராசிபலன் - 25.10.2025
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 8-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 7.08 வரை அனுஷம் பின்பு கேட்டை

திதி: இன்று முழுவதும் சதுர்த்தி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10.45 - 11.45, மாலை 4.45 - 5.45

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மாலை 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.45 - 11.45, மாலை 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்கள் அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து அவர்களுடன் நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பணம் நன்கு நடமாடும். எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தக்கூடும். உறவினர் உதவுவர். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உடல் நலத்தில் சத்துள்ள ஆகாரங்களை சேர்த்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மிதுனம்

உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுலபமாக முடித்துக் காண்பிப்பர். குடும்பத் தலைவிகளுக்கு குடும்ப உறவில் நிம்மதியான சூழல் ஏற்படும். உடலில் பொலிவும் உற்சாகமும் மிகும். ஆன்லைன் வியாபாரம் செழிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மாமியார் வீட்டார் தங்களுக்கு உதவி செய்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

தங்கள் தங்கை வீட்டாரிடம் இதுவரை இல்லாமல் சற்று மனஸ்தாபம் உண்டாகும். தாங்கள் இரங்கினால் அவர்களும் தங்களது தவறினை உணர்ந்து தங்களிடம் நட்பு பாராட்டுவர். உத்யோகஸ்தர்களுக்கு தங்களது அலுவலகத்தில் இதுவரை கிடைக்காத மதிப்பும் கௌரவமும் கூடும். பிள்ளைகள் புரிந்து நடப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

தொழிலில் ஏற்றம் உண்டு. காதல் தொல்லை தரும். உடல் ஆரோக்கியமாக இருக்க தாங்கள் யோகா போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்வீர்கள். குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்பத்தின் வருவாயை பெருக்க வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க முற்படுவர். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

மாமியார் வீட்டில் பெரியவர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் நினைத்ததற்கும் மேலாகவே சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவை தட்டும். தொழில் சுமூகமாக நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

துலாம்

வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். சற்று ஓய்வெடுப்பீர்கள். அண்ணன் தம்பி உறவு மேம்படும். உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். கணவன் வீட்டார் தங்களுக்கு பண உதவி செய்வர். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

கணவன் வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். வெளியூர் பயணம் முன்னேற்றத்தை தரும். மாமியார், மருமகள் உறவு சுமூகமாக இருக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் அதிகரித்து வெளியூர் சுற்றுலா மேற்கொள்வர். நிலம், மனை சம்பந்தப்பட்ட பட்டா வேலைகள் முடியும். உத்யோகஸ்தர்களுக்கு பணம் சீராக வந்து கொண்டிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மருத்துவ செலவு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை தேவை. பெற்றோர்களின் உடல் நலனை கவனிப்பது நல்லது. வெளிநாடு சென்ற பிள்ளைகள் தங்களை பார்க்க வருவர். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கும். இருவரும் கலந்தாலோசித்து வேலைகளை செய்வர். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிடுவர். உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். காதலர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து நடப்பர். உத்யோகத்தில் உள்ளவர்கள் தங்களின் பதவி உயர்வு விஷயமாக சிறிது அலைய வேண்டிவரும். பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு



1 More update

Next Story