குடும்பத்தில் அமைதி நிலவும்...இன்றைய ராசிபலன் - 27.09.2025


குடும்பத்தில் அமைதி நிலவும்...இன்றைய ராசிபலன் - 27.09.2025
x
தினத்தந்தி 27 Sept 2025 6:13 AM IST (Updated: 27 Sept 2025 6:35 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

செப்டம்பர் 27

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: புரட்டாசி

நாள்: 11

ஆங்கில தேதி: 27

மாதம்: செப்டம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று முழுவதும் அனுஷம்

திதி: இன்று காலை 10.17 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 9.00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 3.00

குளிகை காலை: 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

ரிஷபம்

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். பல் சொத்தை சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. பல்லை பரிசோதனை செய்வது நல்லது. தேக்க நிலையில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

சிம்மம்

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.. உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும் வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

காதலர்கள் பொறுப்புணர்வர். தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். அடுத்தடுத்த செலவுகளால் பணப்பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். வெளிபூர் பயணம் வெற்றி தரும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மாணவர்கள் வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

துலாம்

வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள். சுப நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள். இளைஞர்கள் விரும்பியவரை கைபிடிப்பர். மனைவி வழியில் நன்மை உண்டு.காதலர்களுக்கு தங்கள் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய துறையில் சேர தற்போதிலிருந்தே நன்கு படிப்பது நல்லது. உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

நீண்ட காலமாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

தனுசு

நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

மகரம்

தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும். மகள் கர்ப்ப சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தேகம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

1 More update

Next Story