இன்றைய ராசிபலன் - 30.11.2024


இன்றைய ராசிபலன் - 30.11.2024
x
தினத்தந்தி 30 Nov 2024 4:44 AM IST (Updated: 30 Nov 2024 4:46 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

நவம்பர்: 30

கிழமை; சனி கிழமை

தமிழ் வருடம் ; குரோதி

தமிழ் மாதம்; கார்த்திகை

நாள்; 15

ஆங்கில தேதி; 30

ஆங்கில மாதம்: நவம்பர்

வருடம்: 2024

நட்சத்திரம்; இன்று பிற்பகல் 1-39 வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி; இன்று காலை 11-03 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை; 07-45 to 08-45

நல்ல நேரம் மாலை ; 03-15 to 4-15

ராகு காலம் காலை : 9-00 to 10-30

எமகண்டம் மாலை; 1-30 to 3-00

குளிகை காலை; 6-00 to 7-30

கவுரி நல்ல நேரம் காலை; 10-45 to 11-45

கவுரி நல்ல நேரம்; மாலை 9-30 to 10-30

சூலம்; கிழக்கு

சந்திராஷ்டமம்; ரேவதி, அஸ்வினி

ராசிபலன்

மேஷம்

இன்று காரியதடைகள் ஏற்படும். காரணம் சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனம்தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக் குழப்பங்கள் மற்றும் சங்கடங்கள் தோன்றலாம். மிகவும்கவனம் தேவை. இறைவனை வழிப்பட்டு காரியத்தை துவங்கவும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

ரிஷபம்

வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

மிதுனம்

சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இந்த வருடம் நிறைவேறும். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை

கடகம்

வியாபாரம் சீராக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டி வரலாம். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம் கருப்பு

சிம்மம்

குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கன்னி

அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

துலாம்

மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

விருச்சிகம்

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

தனுசு

பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மகரம்

உடல் நலம் சிறப்படையும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கும்பம்

விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

மீனம்

இன்று ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகவே, உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது. புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு




1 More update

Next Story