கன்னி - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்


கன்னி - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை

அமைதியாக இருந்து அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி செவ்வாயும் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் கூட வரலாம். வேலைப்பளுவின் காரணமாக புதிய உத்தியோகத்திற்கான வாய்ப்பைத் தேடிச்செல்லும் சூழ்நிலை உண்டு. சர்ப்ப சாந்திப் பரிகாரங்கள் நிலைமையைச் சீராக்கும்.

சனி வக்ர நிவர்த்தி!

ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாவது யோகம் தான். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்ய இயலும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நிறைய நடைபெறும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பூர்வீகச் சொத்துக்களில் உங்களுக்குரிய பங்கு கிடைப்பதற்கான வழிபிறக்கும். அண்ணன்-தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். சனிக்குரிய வழிபாடுகளைச் செய்வதோடு அதற்குரிய சிறப்பு தலங்களுக்கும் சென்று அனுகூலம் தரும் நாளில் வழிபட்டு வந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.

குரு வக்ரம்!

மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். இது நன்மை தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும். குறிப்பாக தாய்வழி ஆதரவு கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. மண விழா, மணி விழா போன்ற விழாக்கள் மட்டும் அல்லாமல் கிரகப்பிரவேசம் மற்றும் கடைதிறப்பு விழாக்கள் கூட நடைபெறலாம். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

நீச்சம் பெறும் சுக்ரன்!

ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி அதிகரிக்கும். பாசம் காட்டியவர்கள் உங்களை விட்டு விலகலாம். பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.

விருச்சிக புதன்!

ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் உலா வரும் இந்த நேரம் எண்ணங்கள் ஈடேறும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் உறுதியாகலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டிச்சென்று வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பும் பிள்ளைகளுக்கு நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றங்கள் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டு. மாணவ- மாணவியர்களுக்கு கல்வி விருத்தி ஏற்படும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். இட மாற்றங்கள் இனிமை தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 20, 21, 31, நவம்பர் 1, 2, 4, 5, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


Next Story