கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
நல்ல கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் கன்னி ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பரிபூரண பார்வையும் கிடைக்கிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியா எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய திருப்பங்களும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் ஆதாயமும், முறையான பங்கீடுகளும் வந்து சேரும்.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 10-ம் இடத்திலேயே சஞ்சரிப்பது யோகம் தான். உங்கள் ராசிநாதனாகவும் புதன் இருப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல தகவல்கள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியான செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. எதையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்றம், இடமாற்றம் வேதனை தரு வதாக அமையலாம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்புகளின் வழியே இருந்த கோபங்கள் மாறும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. வீடு, இடம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 9-க்கு அதிபதி 10-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம், ஒரு பொற்காலம்தான். தொழிலில் கிளைத் தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களுக்குள் ஏற்பட்ட உரசல்கள் மாறும். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களுக்கும் வேலை கிடைத்து, வருமானம் பெருகும்.
இம்மாதம் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 26, 27, ஜூலை: 1, 2, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவும், செலவும் சமமாகும். குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மேலிடத்தில் கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.