கன்னி - வார பலன்கள்
குறைகளை வெளிப்படுத்தாத கன்னி ராசி அன்பர்களே!
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சச்சரவுகள் விலகும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பழைய கடன்கள் அடைபடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீண்டகாலமாக வராத விருந்தினர் தேடி வர வாய்ப்புண்டு. கலை மற்றும் இசை சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மேன்மை அடைவர். சிலருக்கு, எதிர்பாராமல் வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். எழுத்துத் துறையில் இருப்பவர்களும், பத்திரிகையாளர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது. அரசியலில் உள்ளவர்கள், கவனத்துடன் இல்லாவிட்டால் பலரை பகைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, சீட்டுப்பணம் மற்றும் வரவேண்டிய தொகை தள்ளிப்போகலாம். உடல்நலனில் சிறிய பாதிப்புகள் தோன்றி மறையும். நீண்டதூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.