கன்னி - வார பலன்கள்
முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் பெரும்பாலான செயல்களில் வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். நவீன சாதனங்களை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தில் இருந்து எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டுவர். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும். சுய தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். மூலப்பொருட்களை அதிகரிக்க முற்படுவீர்கள். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். குழந்தைகளின் கல்விக்காகவும், கலை நிகழ்ச்சிக்காகவும் தாராளமாகச் செலவு செய்ய நேரிடும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரிவுகள் மறையும். கலைஞர்கள் புதிய திருப்பத்தைச் சந்திப்பார்கள். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கும். கையிருப்பு சரியான நேரத்தில் கைகொடுக்கும்.
பரிகாரம்:- சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடுவது சிறப்பு.