கன்னி - வார பலன்கள்
அரிய செயல்களை எளிதில் முடிக்கும் கன்னி ராசி அன்பர்களே!
நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக நடைபெறும் வாரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், இதுவரை தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். ஒரு சிலருக்கு வருமானங்கள் மிகுதியாகக் கிடைக்க வழிபிறக்கும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் இருந்த தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும்.
கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். என்றாலும், வழக்கமான வருமானம் குறையாது. அரசியல் துறையில் இருப்பவர்கள், நற்பலன்களைப் பெற சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். பெண்கள், குடும்பத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்து நற்பெயர் பெறுவார்கள்.
பரிகாரம்:- திங்கட்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபாடு செய்தால் கவலைகள் மறையும்.