கன்னி - வார பலன்கள்
30.12.2022 முதல் 5.1.2023 வரை
எச்சரிக்கையோடு காரியங்களில் ஈடுபடும் கன்னி ராசி அன்பர்களே!
சனிக்கிழமை மாலை 5.10 மணி முதல் திங்கள் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்க முடியாது. சில காரியங்களில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காமல் போனாலும், தீவிர முயற்சியோடு மீண்டும் அந்த காரியங்களில் வெற்றிபெற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படலாம். சிலருக்கு அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய பணம் வந்துசேரும்.
சொந்தத் தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி கைக்கு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காணப்படும்.
குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். பங்குச்சந்தை ஏற்றம் தரும் வகையில் சிறப்பாக அமையும்.
பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று நெய் தீபமிட்டு வணங்குவது நல்லது.