கன்னி - வார பலன்கள்
நேர்மையான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
உங்களுக்கு யோக பலன்கள் வந்து சேரும் வாரம் இது. பல நன்மைகள் தேடி வரும் என்றாலும், அவற்றில் சிறுசிறு தடைகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து மகிழ்வர்.
தொழில் செய்பவர்களுக்கு, ஓரளவாவது முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு வரும். அதற்காக கடுமையாக முயற்சிக்க வேண்டியதிருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணமும் அமையலாம்.
குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சுமுகமான போக்கு இருந்து வரும். வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே அவ்வப்போது சுமுகமாக தீர்த்துவிடுவர். உடன்பிறப்புகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும். உங்களின் சேமிப்பு சுபகாரியத்திற்கு செலவழியும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, சிவாலயம் சென்று ஈசனுக்கு அர்ச்சனை செய்தால் பிரச்சினைகள் மறையும்.