கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 13 Jan 2023 1:25 AM IST (Updated: 13 Jan 2023 1:25 AM IST)
t-max-icont-min-icon

சாஸ்திரம், ஆன்மிகத்தில் ஈடுபாடு மிகுந்த கன்னி ராசி அன்பர்களே!

சில தகவல்கள் எதிர்பார்த்தபடி அமையாமல், சஞ்சலத்தைக் கொடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த தொகை கைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. சொந்தத் தொழில் செய்பவருக்கு, பழைய வாடிக்கையாளர் மூலம் புதியவரின் அறிமுகமும், அவரால் தொழில் முன்னேற்றமும் ஏற்படலாம். ஓய்வின்றிப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில், பங்குதாரர்கள் விருப்பத்தின்படி புதிய தொழில் தொடங்க ஆலோசனை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும். பணியாற்றும் பெண்கள், சம்பள உயர்வு பெறுவார்கள். கலைஞர்களில் சிலருக்கு பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். புதிய பண வரவும், புகழும் சேரும். பங்குச்சந்தை வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும்.

பரிகாரம்:- பெருமாளுக்கு புதன்கிழமை, துளசி மாலை சூட்டிவணங்கி வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.


Next Story