கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 Jan 2023 1:20 AM IST (Updated: 27 Jan 2023 1:21 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்துடன் காரியங்களைச் செய்யும் கன்னி ராசி அன்பர்களே!

சனி முதல் திங்கள் காலை 7.45 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. தளர்வடைந்த செயல்களை, பிறகு செய்யலாம் என்று தள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து, பாதியில் நிறுத்தி இருந்த பணியைத் தொடருவார்கள். சக நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளருக்கு, நவீனக் கருவிகளின் உதவியுடன் பணிகளை விரைவாகச் செய்து கொடுப்பார்கள். கூட்டு வியாபாரம் நன்றாக நடைபெறும். குடும்பம் சீராக நடைபெறும். சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவற்றை பெண்களே சமாளித்துவிடுவர். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் பங்குபெற வெளியூர் பயணிப்பார்கள். பங்குச்சந்தை வியாபாரம் லாபம் தரும்.

பரிகாரம்:- சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் நன்மை உண்டாகும்.


Next Story