கன்னி - வார பலன்கள்
நீதியில் நம்பிக்கை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
தீவிர முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தாமதங்களால் தளர்வடையாமல் முன்னேறுவீர்கள். உத்தி யோகஸ்தர்கள் சிலருக்கு அலுவலகத்திலேயே பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய நபரின் வேலையை விரைந்து முடிக்க, ஓய்வின்றிப் பணியில் ஈடுபடுவர். பண வரவு தாமதித்தாலும், வேலைகள் திருப்தியாக நடைபெறும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. பங்குச்சந்தை வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படலாம். கலைஞர்கள், ஆர்வத்தின் காரணமாக கடினமான பணிகளில் நேரடியாகக் கலந்து கொள்வர். அதில் ஒரு சிலர், சிறு விபத்துகளைச் சந்திக்கவும் வாய்ப்புண்டு. குடும்பம் சீராக நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவுகளைச் சந்திக்கலாம்.
பரிகாரம்:- சுக்ரனுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சிறப்பான வாழ்வமையும்.