கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 Feb 2023 1:25 AM IST (Updated: 17 Feb 2023 1:26 AM IST)
t-max-icont-min-icon

வேலைகளை கலையழகுடன் செய்யும் கன்னி ராசி அன்பர்களே!

திட்டமிட்ட காரியங்களில் முதலில் தேக்கநிலை ஏற்பட்டாலும், பின்னர் தொய்வின்றி சீராக காரியங்கள் நடைபெறும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். நிலத்தை வைத்து தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

தெய்வீக யாத்திரை மேற்கொண்டு, உங்கள் மனதிற்குப் பிடித்த தெய்வத்தை தரிசனம் செய்வது, புதிய மந்திர உபதேசம் பெறுவது போன்றவை, உங்களை உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சகப் பணியாளர்களிடம் சற்று நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அரசாங்கப் பதவியில் உள்ளவர்களுக்குப் பதவி மாற்றமும் வரலாம். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக மனக் குறை ஏற்படும். கடுமையான சொற் களைப் பயன்படுத்தாதீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, பெருமாளுக்கும் லட்சுமி தேவிக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.


Next Story