ஹார்லி டேவிட்சன் எலெக்ட்ரா கிளைட்


ஹார்லி டேவிட்சன் எலெக்ட்ரா கிளைட்
x

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது எலெக்ட்ரா கிளைட் என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவிலான விற்பனைக்கு முதல் கட்டமாக 1,750 மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29,51,335. இது 1968-ம் ஆண்டு வெளியான எப்.எல்.ஹெச். எலெக்ட்ரா கிளைட் மாடலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டது.

கம்பீரமாக தோற்றமளிக்கும் பெட்ரோல் டேங்க், ஒற்றை இருக்கை, வயர் ஸ்போக் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் வெள்ளை நிறம் உடைய டயர்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இவை அனைத்தும் அந்தக் காலத்தில் வெளியான மோட்டார் சைக்கிளை நினைவூட்டும் வகையில் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 1,868 சி.சி. திறன் கொண்டது. இது 95 ஹெச்.பி. திறனையும், 165 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இது 6 கியர்களைக் கொண்டது.


Next Story