சார்ஜ் கியூப் 30 அறிமுகம்


சார்ஜ் கியூப் 30 அறிமுகம்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் புதிதாக சார்ஜிங் செய்வதற்கு வசதியாக சார்ஜ் கியூப் 30 என்ற மின்சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் மின்சாரத்தை நேரடியாக சப்ளை செய்யும் ஏ.சி. சாக்கெட் வசதியும், மொபைல் சார்ஜ் செய்வதற்கேற்ற சி போர்ட் மற்றும் ஏ போர்ட் வசதியும் உள்ளது.

இதனால் லேப்டாப் போன்றவற்றை இணைத்து பயன்படுத்துவதோடு பிற மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன், இயர்போன், ஹெட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் 30 வாட் திறன் கொண்ட இரட்டை சார்ஜர் வசதி உள்ளது. வெளிநாடு களில் பயன்படுத்தப்படும் மின்சார பின்களையும் பயன்படுத்தும் வகையில் இதில் 3 சாக்கெட்டுகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.2,499.


Next Story