லெக்சஸ் ஆர்.எக்ஸ்.


லெக்சஸ் ஆர்.எக்ஸ்.
x
தினத்தந்தி 28 April 2023 1:45 PM GMT (Updated: 28 April 2023 1:46 PM GMT)

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதிதாக ஆர்.எக்ஸ். மாடல் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

இதில் இரண்டு வேரியன்ட்கள் (ஆர்.எக்ஸ். 350 ஹெச். லக்ஸுரி, ஆர்.எக்ஸ். 500 ஹெச் ஸ்போர்ட் பிளஸ்) வந்துள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.95.80 லட்சம். பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.1.18 கோடி. ஆர்.எக்ஸ். மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப் படுத்தப்பட்டு தற்போது வர்த்தக ரீதியிலான விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஆர்.எக்ஸ். மாடல் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.

இது 250 ஹெச்.பி. திறனையும் 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. 4,890 மி.மீ. நீளமும், 1,920 மி.மீ. அகலமும், 1,650 மி.மீ உயரமும் கொண்டது. இதில் 14 அங்குல தொடு திரை உள்ளது. வயர்லெஸ் சார்ஜர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி, திறந்து மூடும் மேற்கூரை கொண்டது.

இதை ஸ்டார்ட் செய்து 7.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆர்.எக்ஸ் 500 மாடல் 2.4 லிட்டர் இரட்டை டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 6 ஆட்டோமேடிக் கியர் வசதி உடையது. 371 ஹெச்.பி. திறனையும், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதை ஸ்டார்ட் செய்து 6.2 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கி.மீ. ஆகும்.


Next Story