போர்ஷே 718 ஸ்பைடர் ஆர்.எஸ்.


போர்ஷே 718 ஸ்பைடர் ஆர்.எஸ்.
x

சொகுசு மற்றும் பிரீமியம் பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்கும் போர்ஷே நிறுவனம் புதிதாக 718 ஸ்பைடர் ஆர்.எஸ். என்ற பெயரிலான அதி நவீன காரை அறிமுகம் செய்துள்ளது.

இது 6 சிலிண்டர் என்ஜின் கொண்டது. இரண்டு பேர் பயணிக்கும் வகையிலான இந்த காரை ஸ்டார்ட் செய்த 3.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். 10.9 விநாடிகளில் இந்த கார் 200 கி.மீ. வேகத்தை எட்டி விடும். 3,995 சி.சி. திறன் கொண்ட இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 308 கி.மீ. ஆகும்.

இது இரட்டை கிளட்ச் கியர் பாக்ஸைக் கொண்டது. இதன் மேற்கூரை கழற்றி மாட்டும் வகையிலானது. இதனால் திறந்த நிலையில் பயணம் மேற்கொள்வோருக்கு இது மிகவும் ஏற்றது. இது 20 அங்குல உறுதியான அலுமினியம் சக்கரங்களைக் கொண்டது.

4 லிட்டர் 6 சிலிண்டர் கொண்ட பாக்ஸர் என்ஜின் 368 கிலோவாட் (500 பி.எஸ்.) திறனை 9,000 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இது 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறன் கொண்டது.

கிரே, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது.


Next Story