சத்தீஸ்கரில் பயங்கரம்...மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார் 11 பேர் உயிரிழப்பு


சத்தீஸ்கரில் பயங்கரம்...மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார் 11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 26 April 2023 3:24 PM IST (Updated: 26 April 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்தனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 காவலர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதல்-மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என பூபேஷ் பாதல் தெரிவித்துள்ளார்.


Next Story