10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்


10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள் - உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 12 March 2023 4:42 PM IST (Updated: 12 March 2023 4:44 PM IST)
t-max-icont-min-icon

10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் ஜுன்வாய் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை அதேகிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ள நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story