'புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புயல் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Dec 2023 4:42 AM GMT (Updated: 8 Dec 2023 5:06 AM GMT)

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் புயல் நிவாரணத்திற்கு நிதி அளித்திடுமாறு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு பொதுநிவாரண நிதிக்கு உதவியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் ஏற்பட்ட பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பியதாகவும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story