திமுக எம்.பி.ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்


திமுக எம்.பி.ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்
x
தினத்தந்தி 10 Oct 2023 3:54 PM IST (Updated: 10 Oct 2023 6:02 PM IST)
t-max-icont-min-icon

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

புதுடெல்லி,

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் 15 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் என அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டப்படி சொத்துக்களை கையக்கப்படுத்தி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்பி ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கில், 2002 சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story