கோத்தகிரி சாலையில் பயணிக்க தற்காலிக தடை


கோத்தகிரி சாலையில் பயணிக்க தற்காலிக தடை
x
தினத்தந்தி 23 Nov 2023 7:13 AM GMT (Updated: 23 Nov 2023 7:20 AM GMT)

உதகையில் இருந்து குன்னூர் வழியே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு, மரங்கள் விழுந்ததால் கோத்தகிரி சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலக்டெர் அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Next Story