லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு


லடாக்கில்  ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் உயிரிழப்பு
x

கோப்புப் படம்(பிடிஐ) 

தினத்தந்தி 27 May 2022 4:25 PM IST (Updated: 27 May 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறு ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.


Next Story